சயிட்டம் விவகாரம்: அரசின் தீர்வு யோசனையுடன் இணங்க முடியாது – தேசிய தொழிற்சங்க ஒன்றிய மத்திய நிலையம்!

Sunday, April 9th, 2017

மாலபே சயிட்டம் நிறுவனத்தை மூடிவிட்டு அந்த மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தொழிற்சங்க ஒன்றிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சயிட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் வைத்தியர் நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு யோசனையுடன் ஒருபோதும் உடன்பட முடியாது என்று அந்த நிலையம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் சயிட்டம் நிறுவனம் மூடப்படாவிட்டால், அதற்கெதிராக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய தொழிற்சங்க ஒன்றிய மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த கூறியுள்ளார்.

இதற்கிடையில் அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அடுத்த வாரமளவில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த கூறினார்.

Related posts: