சயிட்டத்தை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Saturday, May 13th, 2017சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சபையின் ஒழுங்குமுறைக்கு அடிபணியாமல் செயற்படும் சய்டம் நிறுவனத்தை காப்பாற்ற சுகாதார அமைச்சர் முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டியது.
சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சரின் வெட்கப்பட வேண்டிய தலையீடு தற்போது நாட்டு மக்கள் முன்னிலையில் நிரூபணமாகியுள்ளது.தனிப்பட்ட நலன் காரணமாகவே சுகாதார அமைச்சர் அதனை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதேவேளை நாட்டில் டெங்கு பரவும் அளவு அதிகரித்துள்ளதுடன், அதனை தடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது என்றும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
சய்டமை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாகவேனும் நிறுத்திவிட்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|