சயிடம் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!

Tuesday, March 14th, 2017

சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய சபை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. மாலபே வைத்தியக் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்க அனுமதியுள்ளது என அண்மையில் தீர்ப்பளித்தது.

மேலும், அங்கு பட்டத்தை நிறைவு செய்தவர்களை வைத்தியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வைத்திய சபை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

 

Related posts: