சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!

Friday, July 12th, 2019

பாடசாலை அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக நிதியமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் பி.சி.பெரேரா சம்பள அறிக்கையின் மூலமே இந்த சம்பள முரண்பாட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்கு அமைவாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர்களின் சம்பளம் 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் ஆலோசகர்கள் சம்பள முரண்பாடு குறித்து குறுகிய காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வத...
வடக்கை விட்டு வெளியில் செல்ல முடியாது: நிபந்தனையுடன் தயா மாஸ்டருக்கு பிணை.!
காலநிலை மாற்றம்  - நீர்த்தேக்கங்களில் நீரின் அளவில் வீழ்ச்சி!
மக்களுக்கான செயற்றிட்டங்களை தமது தனிப்பட்ட செயற்பாடாக யாரும் உரிமை கோர முடியாது - ஈ.பி.டி.பியின் யாழ...
இந்து, கலை, கலாசாரத்துக்கென பல்கலையில் தனியான வளாகம் - வடக்கு ஆளுநர் !