சம்பள அதிகரிப்பு வழங்குவது கடினமானது : அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
Wednesday, October 5th, 2016தேயிலை மற்றும் இரப்பரின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவது என்பது கடினமான விடயம் தான் ஆனால் இதுதொடர்பில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் பேசி முடிவுக்கு வரவேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!
வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
விலையை குறைக்காவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி - இன்று முக்கிய கலந்துரையாடல் - அமைச்சர் நளின் பெர்ன...
|
|