சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் – எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர துறைசார் தரப்பு உறுதி!
Wednesday, April 6th, 2022ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்றுமுன்தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருப்பதாக லாஃ ப் காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதனை இறக்குவதற்கு தேவையான வங்கி நடவடிக்கைகளை இலங்கை வங்கி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
இலங்கை தனியார் பௌசர் வாகன உரிமையாளர்கள் சங்கத்திற்கும் – கொலன்னாவை மசகு எண்ணெய் முனைய நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது.
சகல கோரிக்கைகளுக்குமான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதாக தனியார் பௌசர் வாகன உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|