சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை நிராகரித்தது நுகர்வோர் விவகார அதிகார சபை !

Tuesday, February 2nd, 2021

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று முன்வைத்த கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை தற்போது ஆயிரத்து 493 ரூபாயாக காணப்படுகின்ற நிலையில் அதனை ஆயிரத்து 900 ரூபாயாக அதிகரிக்குமாறு அந்த நிறுவனம் கோரியிருந்தது.

அத்துடன்  சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் அது குறித்த விலைகள் தொடர்பான விபரங்களை குறித்த நிறுவனம் வழங்காமை காரணமாக விலை அதிகரிப்பிற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: