சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Tuesday, April 27th, 2021

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தபோதிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் சமையல் எரிவாயு விலையினை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்படி, 12. 5 கிலோகிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைந்தபட்சம் 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!
நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு - அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர்...
உலக வங்கியின் சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனத்தினால் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவி!