சமூக விரோத செயலைக் கட்டுப்படுத்த முயன்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது வாள் வெட்டு – படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 7.20 மணியளவில் நடைபெற்ற குறித்த சம்பவத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதச சபை உறுப்பினர் நிமலரூபனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் வருகை தந்த மூவரடங்கிய குழு ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சமூகவிரோத செயற்பாடான கசிப்பு உற்பத்தி அதிகரித்திருந்த நிலையில் அதை தடுத்து நிறுத்த உறுப்பினர் நிமலரூபன் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முயற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளார்
அத்துடன் இன்றையதினம் நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலும் இது தொடர்பில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று பின்னிரவு 7.20 அணியளவில் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்குச் சென்ற மூவர் அவர் மீது சரமாரியாக வாளால் வெட்டியதுடன் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குறித்த வாள் வெட்டு தாக்குதலை நடத்திய மூவரையும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பிடிக்க முயற்சித்தபோது இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு பிரத்தயேகமாக நையப்பு உடைக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|