சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாற்றம் இலங்கை சட்டத்திற்கமைய குற்றமல்ல – சட்டத்தரணி மஹாநாமகே !

சமூக வலைத்தளம் ஊடாக பரிமாற்றிக் கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல என சட்டத்தரணி மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்
சட்டத்தரணிகள் சங்கத் தலமையகத்தில் நேற்று முன் தினம் இடம் பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இன்று 3 பிள்ளைகளின் கல்வி உரிமையை இந்த அரசாங்கம் இழக்கச் செய்தள்ளது பேஸ்புக்கில் ஏதோ ஒன்றை பகிர்ந்தமையால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் பயங்கரவாத தடைச்சட்டத்திலேயே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் இதனுடன் தொடர்புடையவாகள் ஒருவரும் கைது செய்யப்படவில்லை மின்னஞ்சல் ஒன்றைப் பகிர்வது இலங்கை சட்டத்தில் தவறு அல்ல
ஜனாதிபதி இணையத்தளத்திற்குள் ஊடுறுவிய மாணவன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் ஏன் இந்த இரட்டை நடைமுறை?சமனான நீதி எங்கே? அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் மனித உரிமையை மீறினால் அமைதியாக இருக்க வேண்டாம் அந்த நேரத்திலேயே சத்தமிடுங்கள் முடிந்தால் அதனை காணொலியாகப் பதிவிட்டு இணையத்தில் வெளியிடுங்கள் பொலிஸ் அதிகாரி யாரையாவது தாக்கினால் அதனை பயமின்றி காணொலியாக பதிவிட்டு இணையத்தளத்தில் பதிவேற்றுங்கள் .அதற்கு எதிராக யாரையும் கைது செய்ய முடியாது மதிய நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர் கிராண்ட் பாஸ்ட் பகுதியில் தலையைக் கொண்டு வந்து போடுகின்றார்கள் இவ்வாறான தவறுகள் செய்ய முடியும் .இவற்றுக்கு விசேட நீதிமன்றங்கள் கிடையாது அப்படி என்றால் இது தான் நீதியான சட்டமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
|
|