சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறை!

Sunday, March 11th, 2018

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related posts:


இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை - தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு...
அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் ...