சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்து!

Thursday, August 5th, 2021

பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை என்பதால், அவற்றை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர், சீனாவில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

“என்ன நடக்கிறது என்பதற்கு சமூக ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். நல்ல சிறப்பம்சங்களைக் காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் இவற்றை முறையாக ஒழுங்குபடுத்த சட்டங்களை கொண்டு வர வேண்டும். நான் அமைச்சரவையில் ஒவ்வொரு நாளும் இதைப் பற்றி பேசுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: