சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

குறித்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாடாளுமன்றில் மேலும் கூறுகையில் –

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவது அண்மைக்காலமாக  அதிகரித்துவருகின்றது. இந்நிலையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்களின் உரிமைகள் மீறப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெளிவுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: