சமூக பொறுப்பு விடயத்தில் பாடசாலை மாணவர்களே சிறந்த செய்தியாளர்கள் – ஜனாதிபதி!
Friday, January 20th, 2017நிலைபேறான அபிவிருத்திச் சமூகத்தின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேவதில், பாடசாலை மாணவர்கள் உண்மையான செய்தியாளர்களாக திகழ்கிறார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திகன ஹெங்கல்ல மகாவித்தியாலயத்தில் நேற்று நிலைபேறான அபிவிருத்தி பாடசாலை சங்கங்களை அமைக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை ஒருபோதும் பின்போட முடியாது. அபிவிருத்திப் பணிகளுக்காக வளிமண்டலத்தில் தீய வாயுக்களைச் சேர்த்து உலக வெப்பநிலையை அதிகரித்து மனித குலத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய வல்லரசுகள் இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நாடுகள் இயற்கை பெறுமானங்களை புறக்கணித்து செயற்படுகின்றன. இதன் காரணமாக மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் உயிர் வாழ்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. இலங்கையை இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நாடாக மாற்ற வேண்டுமாயின், வன வள அடர்த்தியை 50 சதவீதம் வரையிலாவது உயர்த்த வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறும் பட்சத்தில், இலங்கை மக்களின் இருப்புக் குறித்த சவால் எழும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|