சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Wednesday, September 4th, 2024

தங்களது அரசாங்கத்தின் கீழ் சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – பெல்மதுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் வருமானத்தைக் குறைத்து செலவை அதிகரித்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

எமக்குத் தேவையான அந்திய செலாவணியை நாம் ஈட்டாவிட்டால், எதிர்வரும் 10 அல்லது 15 வருடங்களில் மீண்டும் அதேநிலை ஏற்படும்.  அதேநேரம், எதிர்வரும் காலங்களில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் இன்று சமூகத்தில் ஒடுக்குமுறைக்குப் பலவிதமான உள்ளாகியுள்ளனர்.  சமூகத்தில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமையினால் சிலர் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.  அவற்றை இல்லாமல் ஒழிப்பதற்கு சமூக நீதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.

அதேநேரம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

000

Related posts: