சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு யாழில் போராட்டம்!

Saturday, April 9th, 2016

யாழ்ப்பாணத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று (9) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது..

யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகி 12. 30 வரை இடம்பெற்றது.

65 ஆயிரம் வீட்டுத் திட்டம், சம்பூர் அனல்மின் நிலையம் மற்றும் சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை ஆகியவற்றிற்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைத்து கொடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: