சமூக ஊடங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சே வேண்டுகோள் விடுத்தது – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விளக்கம்!

Sunday, April 3rd, 2022

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வட்ஸ்அப், டுவிட்டர் போன்றவற்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது பயனற்ற ஒரு விடயம் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் விபிஎன் செயலியைப் பயன்படுத்தி டுவிட்டர் தளத்தில் அவர் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். ஆயினும், வி.பி.என் ஊடாக, பயனடைய முடியும். அந்த முறைமையின் ஊடாகவே நான், இப்போது பயன்படுத்துகின்றேன்.

வி.பி.என் முறைமைகள், அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Related posts: