சமூக ஊடகங்களுக்கான வலவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022

நாட்டில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தமது ஆக்கப்பூர்வமான நுண்ணறிவுடன் டிஜிட்டல் துறையில் தொழில்களை ஆரம்பிக்கும் வகையில் காப்புரிமைச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வணிக வளர்ச்சிக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த பெரிதும் பயனடைவார்கள் என சரித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்..

அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை மீதான வலுவான சட்ட கட்டமைப்பை நாம் கொண்டிருக்க முடியாவிட்டால் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: