சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் பொய்யானவை – தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்படாது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, November 25th, 2021

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் அறிக்கைகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையூறு விளைவிப்பதற்காக சில பிரிவினர் எரிவாயுவின் தரம் தொடர்பில் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறான பொய்யான கூற்றுக்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக பத்திரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட ஆறு மில்லியன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் வெளியிடப்படும் அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்வதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: