”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது – பொதுப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024

”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.

அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எவ்வாறு இருப்பினும் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: