சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை இன்றுமுதல் கைது செய்ய நடவடிக்கை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்வதனை தவிர வேறு நடவடிக்கைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டில் அபாய வலயங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு இன்று காலைமுதல் பகுதியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றுமுதல் சுகாதார சட்ட திட்டங்களை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் பொலிஸார் சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்கள் மற்றும் குழுவாக பொது இடங்களில் பயணிப்பவர்களும் இன்றுமுதல் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கிற்கமைய வெளியே செல்லும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறிப்பிட்ட தினத்திற்கென ஒதுக்கப்டபட்ட இலக்கங்களை உள்ளவர்கள் மாத்திரமே அந்தந்த நாட்களில் வெளியே செல்ல முடியும் என்பதுடன் ஏதேனும் தேவைகளுக்காக வீட்டை விட்டு செல்பவர்கள் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு பொது மக்களிடம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|