சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – புத்திஜீவிகள் கோரிக்கை!

Tuesday, May 2nd, 2017

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாகவாள் வெட்டுத் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் மக்கள் நாளாந்தம் அச்சத்துடனேயேவாழ்ந்துவருவதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைபிடாரி அம்மன் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினம் வாள்வெட்டுசம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தநபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு இளைஞர்களுக்கிடையே வாய்த்தர்க்கத்தில் தொடங்கிபின்னர் மோதலாகமாறிய நிலையில் குறித்தபகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

வாள்வெட்டுத் தாக்குதல்கள்; போன்றசம்பவங்கள் மக்கள் மத்தியில் பாரிய அச்சமானதும் பதற்றமானதுமான சூழ்நிலையை ஏற்படுத்திவருகின்றன.

இவ்வாறானசம்பவங்கள் தொடரும் சந்தர்ப்பத்தில் எமது இளையசமூகம் மேலும் பின்னடைவுகளை எதிர்கொள்ளநேரிடு மென்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையேஅண்மையில் முல்லைத்தீவுமாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்றவாள்வெட்டுச் சம்பவத்தில் நான்குபேர் படுகாயமடைந்தநிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இச்சம்பவங்கள் எதிர்காலத்திலும் தொடராமல் தடுப்பதற்குசமூகப்பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயற்படவேண்டுமென சமூகநலன்விரும்பிகள், புத்திஜீவிகள் எனப் பலதரப்பட்டோரும்  தமது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: