சமூகம் விழிப்படைந்தால் மட்டுமே வாள்வெட்டுகளைக் குறைக்கலாம் – ரெஜினோல்ட் குரே !

Friday, July 27th, 2018

தற்போதைய இளைஞர்கள் இணையத்தளம், கைபேசிப் பாவனையில் மூழ்கியுள்ளனர். உறவினர்கள் வந்தால்கூட அவர்களுடன் உரையாடுவதில்லை. தனிமையை விரும்புகின்றனர். திரைப்படங்களைப் பார்த்து அவற்றிலுள்ளது போன்று செயற்பட விரும்புகின்றனர். இந்த நிலைமையை மாற்ற சமூகம் முன்வர வேண்டும். பிள்ளைகளில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த ஆளுநர் மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

சமயத் தலங்களில் வெறுமனே வழிபாடுகளுடன் நின்றுவிடாது நற்பண்புகளைப் புகட்டுவதிலும் முன்னிற்க வேண்டும். இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பொலிஸாரை அனுப்ப முடியாது. வீட்டுக்கு வீடு பொலிஸாரை காவல் வைக்கவும் முடியாது. இது தொடர்பான விடயங்களில் சமூகமே சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.

Related posts: