சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Wednesday, June 15th, 20222022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
9 மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!
கடும் வரட்சி: 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்!
குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நிறுவனங்கள் ஜூனில் தொழிற்பாடுகளை ஆரம்பிக்கும் - மின்சக்தி மற்றும...
|
|