சமூகத் தொற்றாக மாறுகின்றதா கொரோனா – அச்சத்தில் தென்னிலங்கை மக்கள்!

Wednesday, May 6th, 2020

கொழும்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் கொழும்பு மாவட்டத்தில் சமூகத் தொற்றுப் பரவல் ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் பலர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் மையம் மற்றும் முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வெளியே கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதேபோன்று இராஜகிரிய பிரதேசத்திலும் ஓட்டோ சாரதி ஒருவரும் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மோதரைப் பகுதி மாடி வீட்டிலும் கொரோனா தொற்றுடன் 62 வயதான பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேவேளை, கொலன்னாவ பிரதேசத்திலும் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related posts: