சமூகத்திற்கு உன்னதமான பணிகளை நிறைவேற்றக்கூடிய தொழில் சட்டத்தரணி தொழில் – பிரதமர்!

Monday, March 27th, 2017

சட்டத்தரணி தொழில் சமூகத்திற்கு உன்னதமான பணிகளை நிறைவேற்றக்கூடிய தொழிலாகுமென்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்க உத்தியோகத்தர்களின் 43வது வருடாந்த பதவியேற்பு வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதமர் உரையாற்றுகையில் அனைவருக்கும் சமமான நிலையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

சட்டத்தை உறுதி செய்வதில் சட்டத்தரணி தொழில்துறைக்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2017-2018 வருடத்திற்கான தலைவராக சட்டத்தரணி உதய ரொஹான் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் உபதலைவராக மேல்நீதிமன்றத்தின் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக சுஜீவ லால் தஹநாயக்க தெரிவானார்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உதய ரொஹான் டி சில்வா, தம்மை இப்பதவிக்குத் தெரிவு செய்த அனைத்து சட்டத்தரணிகளுக்கும் நன்றி தெரிவித்தார்..அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts: