சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் 125 பேர்  “தேசோதய தீபம்”  விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்

Tuesday, May 24th, 2016

யாழ். மாவட்டத் தேசோதய சபையும் , சர்வோதயமும்  சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் சமாதான நீதவான்கள் மற்றும் தேசோதய சபை உறுப்பினர்களைக் கெளரவிக்கும் நிகழ்வை  நேற்றுத் திங்கட்கிழமை (23-05-2016) காலை சர்வோதய சபையின் யாழ். மாவட்ட நிலையத்தில் ஏற்பாடு செய்து நடாத்தினர்.

தேசோதய சபையின்  தலைவர் கலாநிதி நா. தனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம் .இளஞ்செழியன் பிரதம விருந்தினராகவும், யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடாதிபதி க. வேல்நம்பி கெளரவ விருந்தினராகவும்  , யாழ். தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் திருமதி -துஷ்யந்தினி அருளானந்தம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் உரையைத் தொடர்ந்து  சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் சமாதான நீதவான்கள் , தேசோதய சபை உறுப்பினர்கள் என 125 வரையானோர்  “தேசோதய தீபம்” எனும் சிறப்பு விருதும், சான்றிதழ்களும்  வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இவ்வாறு விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டோரில் ஓய்வு நிலை நீதிபதி திருமதி- இளங்கோ,யாழ்.பல்கலைக் கழகப் பேராசிரியர்களான சின்னத்தம்பி,க.தேவராஜா, மூத்த ஊடகவியலாளர் எஸ்.குலசிங்கம்,நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான அ.ரவீந்திரதாஸ் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது இந்த நிகழ்வில் உலக சைவத் திருச் சபையின் இலங்கைக்கான திருச் சபை நாயகர் சிவஸ்ரீ கதிர் கு.சுமூகலிங்கம்  அவர்களால் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம் .இளஞ்செழியன்  “சமச்சீர்க் காவலன்”  எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கபட்டமையும் குறிப்பிடத்த்தக்கது.
44f6f139-0afe-41b3-8c8f-d92f517c0a5c
12932af0-ac20-4f49-b0c3-2e5b48d7677f
8804c40b-9db7-401c-858d-5f47265ee5f8

Related posts: