சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, July 21st, 2023

ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின் ஆதரவு பெருமளவில் கிடைத்து வருவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக திருமதி சந்திரிகா காலத்தில் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் சமுர்த்தி திட்டத்தை மிக வலுவாக தொடர்ந்தது.

சமுர்த்தி திட்டத்தின் ஒரே நோக்கம் மக்களை சேமிப்பதை ஊக்குவிப்பதும், புதிய நிரந்தர வருமானத்தை உருவாக்குவதும், குறிப்பாக சுயதொழிலை உருவாக்குவதும், ஏழைகளை தனித்து நிற்க ஊக்குவிப்பதும் ஆகும்.

ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் இலவச சுகாதாரம், இலவசக் கல்வி, சமுர்த்தி வேலைத் திட்டம் என்று ஏராளமான பணத்தைச் செலவிடுகிறது.

தற்போது சமுர்த்தி திட்டம் வங்கி அமைப்பாக வளர்ந்துள்ளது, சமுர்த்தி திட்டமானது தற்போது வளமான குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அக்குடும்பங்களின் மாணவர்களின் கல்விக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான எனது அரசியல் வாழ்க்கையில், மேல்மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்வி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் பதவிகளை வகித்துள்ளேன். அந்த இரண்டு அமைச்சுக்களும் நான் மிகவும் விரும்பிய இரண்டாகும்.

சமுர்த்தி திட்டம் மிகவும் விஞ்ஞான ரீதியாக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமாகும். எனவே, சமுர்த்தி திட்டத்தை வலுவிழக்கச் செய்யவும், குழி பறிக்கவும் அரசாங்கம் செயற்படவில்லை. மக்கள் கனவில் கூட அப்படி நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

சமுர்த்தி திட்டத்தை மக்களுடன் நெருங்கிச் செல்ல, வேலைத்திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பெருமளவு ஆதரவு கிடைத்து வருகிறது. சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஆதரவை எமக்கு கிடைக்காவிடின் இந்த வேலைத் திட்டத்தை இவ்வளவு வெற்றிகரமாக செயற்படுத்த முடியாது.

சமுர்த்தி திட்டத்தை மிகவும் மேம்பட்ட மற்றும் வலுவான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.

அந்தப் பயணத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். நாடு ஏற்கனவே பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் அரசு செழிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை குறைக்க தயாராக இல்லை.

சமுர்த்தி திட்டத்தினால் பெருந்தொகையான மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். சவால்களை எதிர்கொள்ளவும், மக்களின் வாழ்வுக்கு மேலும் பலத்தை அளித்து சமுர்த்தி திட்டத்தை தொடரவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: