சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி – முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

Monday, March 30th, 2020

சமுர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு அதன் முதற் கட்ட கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த அமைச்சரவையின் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்த நிலையில் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் 20 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனரும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த சமுர்த்தி உதவித் திட்டத்தின் கீழ் கல்வியங்காடு திருநெல்வேலி கொக்குவில் கோண்டாவில் அரியாலை மத்தி, முள்ளி அரியாலை ஆகிய பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டிக்கு உட்பட்ட  சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச உலர் உணவு  நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு உலருணவு பொருட்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 10 இலட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருத்துக் கூறும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே வங்கிக் கடன் உள்ளிட்ட கடன்களை சிறிது காலம் செலுத்தாமிலிருப்பதற்கு அரசாங்கம் சலுகை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அந்த நடைமுறையை வங்கிகள் இதுவரை நடைமுறைப்படுத்தாதுள்ளமை தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: