சமுர்த்தி திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தள்ளார்.
நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தென்மராட்சிக்கு குழாய் மூலம் குடிதண்ணீர்!
முல்லைத்தீவில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
|
|