சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தினூடாக நல்லூர் பிரதேசத்தில் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Friday, March 25th, 2022

சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்ட ஏற்பாட்டில் வாழ்வாதார கடன் வசதிகள், மாணவர்களுக்கான சிப்தர புலமை பரிசில், வீட்டுத்தோட்ட ஊக்குவிப்புக்கள், மற்றும் பொற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் நல்லூர் திருநெல்வேலி சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஈ.பி.டீ.பி கட்சியின் நல்லூர் பிரதுச நிர்வாக பொறுப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசன் கட்சியின் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: