சமுர்த்தி கொடுப்பனவை மீளப் பெறும் விவகாரம்: அமைச்சர் திஸநாயக்காவுக்கு எதிராக மனு!

Friday, February 17th, 2017

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செழிப்பான இல்லம் (இசுருமத் நிவஹனக்) வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு வீடுகளைக் கட்டுவதற்காக வழங்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை, சமுர்த்தி பயனாளிகளிடம் இருந்து மீனப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சாமர மத்துமகலுகே குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

s-b-dissanayake

Related posts: