சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை!

Tuesday, July 7th, 2020

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: