சமாதானத்துடன் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, April 5th, 2017

அதிகாரத்தை பகிர்ந்தளித்து அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. புதிய வைத்தியசாலை கட்டிடத்தை அமைப்பதற்காக நான்கு காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன உரையாற்றினார். இற்த நிகழ்வு நேற்று நடைபெற்றது

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் யாழ் மாவட்ட வைத்தியசாலைக்காக தொண்டர் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பதவியில் அமர்த்துவது குறித்தும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தகுதியான ஊழியர்கள் நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள்.

Related posts: