சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப மாறுதல்களும் ஏற்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிரவாக செயலாளர் வி.கே.ஜெகன்!

சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப எமது கட்சியின் கட்டமைப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் கொள்கையில் மாற்றமில்லாதவாறு நாம் எமது அரசியல் சார்ந்த விடயங்களை மக்கள் மயப்படுத்தும் பொருட்டு பல்வேறு வேலைத்திட்டங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுத்து வருகின்றோம்.
சிறந்த தலைமைத்துவமும் தூரநோக்கும் கொண்ட எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு வேளைகளிலும் எமக்கு அரசியல், பொருளியல், உள்ளிட்ட சமகால விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தி வருகின்றார். அதனடிப்படையில் சமகால, உலக அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களின் வாழ்வு மற்றும் அரசியல் சார்ந்த உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் புதிய மாற்றங்களுடாக மக்கள் மத்தியில் அரசியல் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு அதற்காக கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதே ஒழிய கட்சிக் கொள்கையில் இருந்து நாம் ஒரு போதும் வழித்தவறி போகவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்றார்.
மேலும் இம் மாற்றங்கள் ஊடாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலாசனை மற்றும் வழிகாட்டலுடாக எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் வட்டார, பிரதேச, மாவட்ட ரீதியாக நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில்தான் தற்போது வட்டார ரீதியாக வட்டார செயலாளர்களைச் சந்தித்து அவர்களுக்கான விளக்கங்களை வழங்கி வருகின்றோம் என்றும் பிரதேச வட்டார ரீதியில் கட்சியின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால் எமது கட்சியின் செயற்பாடுகள் முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|