சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!
Thursday, February 9th, 2017சமகால அரசியல் சூழ்நிலை குறித்து எமது கட்சி கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தொடர்ந்தும் மக்களுக்கு உறுதியுடன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தெளிவுபடுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்
நேற்று முன்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாக குழு கூட்டத்திலேயே அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கட்சிக்கென நிர்வாக கட்டமைப்புக்கள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. இல்லாத இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த நிர்வாக கட்டமைபின் ஊடாக கட்சியின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை நாம் தொடர்ந்தும் உருவாக்க வேண்டும். ஆகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாத வரை நாம் அனைவரும் உறுதியுடன் தொடர்ந்தும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் கடந்த காலங்களில் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எமது கட்சி பாரிய பணிகளை ஆற்றியிருக்கின்றது. தொடர்ந்தும் நாம் எமது மக்களுக்காகவும் அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் இடையறாது உறுதியுடன் உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|