சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பம் – இரண்டு வாரங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 30th, 2022

90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கமைய நாளாந்தம் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய முடியும்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் என்பன பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.

நாளை மற்றும் எதிர்வரும் 14, 16 ஆம் திகதிகளிலும் டீசல் அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: