சபைகளின் அமர்வு திகதிகள் அறிவிப்பு !

Tuesday, March 27th, 2018

வடக்கு மாகாணத்தில் தொங்கு நிலையில் இல்லாத 4 சபைகளில் முதலாவது அமர்வுக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சபைகளின் முதலாவது அமர்வுகள் தவிசாளர் தலமையில் நடைபெறவுள்ளன. இதற்கமையயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு நாளை புதன் கிழமை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தவிசாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் குதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதலாவது அமர்வும் எதிர்வரும் 4 ஆம் திகதியும்  கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி  பிரதேச சபையின் முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது.

இந்தச் சபைகளின் தவிசாளர் ஏற்கனவே தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர் இதே வேளை வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் முதலாவது அமர்வுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: