சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, December 7th, 2021

மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் இன்று 7 ஆம்திகதி  செவ்வாய்க்கிழமைமுதல் மீண்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

முன்பதாக களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதிமுதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அத்துடன் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய் இன்மை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.

ஜனவரி மாத நடுப்பகுதியிலும், எரிபொருளை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: