சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை இலக்கம் 2 இல் காலை 8.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் நியமனம் மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் நாளை நாடாளுமன்றம் முதல் தடவையாக கூடுகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!
தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் - பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!
மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை - எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்ல...
|
|