சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வி!
Thursday, March 21st, 2024
……
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அதன்படி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
அந்த வகையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையில் தோற்கடிக்கப்பட்டது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் தொடர் மழை – மக்கள் அவதி!
ஊரடங்கு சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை - சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ...
இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் - சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !
|
|