சபாநாயகரின் உதவியை நாடியது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி!

Wednesday, March 9th, 2022

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளது.

செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.

மேலும் எந்தவொரு சமூகத்தையும் அல்லது மதத்தையோ வித்தியாசமாக நடத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேசிய கொள்கையை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இந்த செயலணியானது இதுவரை 06 மாகாணங்களில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுள்ளதாகவும் ஏனைய மாகாணங்களில் கருத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: