சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனம் !

Tuesday, February 16th, 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜெயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றார்

முன்பதாக அவர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இராஜாங்க செயலாளராக ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்பதாக கடந்த ஜனவரி 23ம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஹிக்கடுவையிலுள்ள விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு அதன் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0

Related posts: