சனிக்கிழமையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திறக்கப்படும்!

Thursday, March 14th, 2019

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய திணைக்களம் ஆகியவை இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் திறக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகன அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்காகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் சனிக்கிழமைகளிலும் வாகன சான்றிதழ் அனுமதி பத்திரம் வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: