சனிக்கிழமையன்று போட்டிப் பரீட்சை!

Wednesday, November 9th, 2016

வடமாகாணக் கல்வி வலயங்களில் நிலவும் பாடரீதியான ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

வடமாகாண அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கமைவாக ஆசிரிய ஆலோசகர் தெரிவுகள் போட்டிப் பரீட்சை அடிப்படையில் நடைபெறவுள்ளன. போட்டிப் பரீட்சை யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடத்தப்படும். பரீட்சைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் கிடைக்க பெறாதோர் 10ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10 மணிக்குப் பின்னர் மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாகாணசபை திணைக்களம் தெரிவித்துள்ளது.

gdgd_19082016_kaa_cmy

Related posts: