சனத்தொகை, குடும்பக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Saturday, December 11th, 20212021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்த சனத்தொகை மற்றும் குடும்பக் கணக்கெடுப்பு 2022 – 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் “நிலையான வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு துல்லியமான தரவுகள் தேவை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அதில் முக்கிய பங்காற்றுகிறது.
எனவே, 2021 இல் முன்னெடுக்கப்படவிருந்த சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2022 -2023 இல் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்று நோய்க்கு பிந்தைய நெருக்கடியின் விளைவாக ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையும் கடினமான காலகட்டத்தைக் கடந்து செல்கிறது.
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் துறையானது, குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களைத் தயாரித்து,
அத்துடன் தொற்று நோய்க்குப் பிந்தைய நெருக்கடியைச் சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|