சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கிவைப்பு!

Monday, March 11th, 2019

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டுக்கான காசோலைகள் இன்றையதினம் சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணைப் பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.


மக்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சனசமூக நிலையங்கள் பல நிதி நெருக்கடிகளால் பாதிக்கப்படுவதால் அவற்றை சீர்செய்யும் வகையில் அரசமானியமாக வருடாந்தம் ஒவ்வொரு பிரதேச சபை ஆழுகைக்குள் இருக்கும் சனசமூக நிலையங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது.


அதற்கமைய இன்றையதினம் சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செயற்றிறனுடன் இயங்கும் 38 சனசமூக நிலையங்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த ஆண்டு(2018) 44 சனசமூக நிலையங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில்  இம்முறை 38 சனசமூக நிலையங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: