சந்நிதியான் ஆலய வளாக கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை இனங்கண்டு, அவர்களையும் சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை திருவிழாவுக்கு முன்னர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கவேண்டும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமையவே நேற்று 36 பேரிடம் பி.சி.ஆர்.மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி!
இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|