சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துங்கள் – சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

Saturday, May 15th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

அதில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிலுவையில் உள்ள விசாரணைகள் குறித்தும் சட்டமா அதிபர் கோரியுள்ளதாக அத்திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு சந்தேக நபர்களில் ஐந்து பேரின் விசாரணைகள் இன்னும் முழுமையடையவில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: