சந்தேகத்திற்கிடமாக ஒன்றுகூடிய 41 இளைஞர்கள் மருதனார்மடத்தில் இராணுவத்தினாரால் கைது!

Tuesday, February 25th, 2020

மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் இன்று (24) இரவு சற்றுமுன் சுற்றி வளைக்கப்பட்டு 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் அதிகமான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் இராணுவத்தினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் உஅங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது 23 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts: